The New Stuff

Public Aug 22

சாருடன் படுக்கையை பகிரு...உன் லெவலே மாறிடும்! புகார் கொடுத்தாலும் எங்கள ஒன்னும் பன்ன முடியாது...!

 Thiruvanamalai, Hostel Wardens,students

அரசு கல்லூரியில் மாணவியை உதவி பேராசிரியருடன் படுக்கையை பகிருமாறு விடுதி வார்டன்கள் பேசியுள்ள ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண் கலைக் கல்லூரியில் Bsc 2-ஆம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில், குறித்த மாணவி கல்லூரி உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் என்பவர் தன்னுடன் உறவு கொள்ளுமாறு டார்ச்சர் செய்வதாக புகார் அளித்திருந்தார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த விடுதியின் வார்டன்களான மைதிலி மற்றும் புனிதா குறித்த மாணவியை புகார் கொடுத்தது குறித்து மாணவியை மிரட்டியதுடன் இது ஒரு சின்ன மேட்டர், சாரின் ஆசையை நிறைவேற்றிவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் மறந்துவிடு என பிரெயின் வாஷ் செய்துள்ளனர்.

மேலும், சாருடன் நீ அட்ஜஸ்ட் செய்தால் உன்னை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைப்பதுடன், பெரிய லெவலுக்கு கொண்டு போவார். இதே கல்லூரியிலேயே நீ பேராசிரியராக வரலாம். அவருக்கு ரெண்டாம் தாரமாகவும் ஆகி வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம்' என்றும் மாணவியிடம் பேசி வலை விரித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாது, நீ என்ன புகார் கொடுத்தாலும் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவோம், உனக்கு எதிராக ஆதாரங்ளை நிரூபிக்க முடியும் என்றும் வார்டன்கள் மாணவியை மிரட்டியுள்ளனர்.

பெரிய டிஜிபியே ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் உனது பெற்றோர் கேட்டால் நீ வரவே இல்லை என்றும் கூறிவிடுவோம் என தெனாவட்டாக பேசியுள்ளனர் வார்டன்கள்.

மேலும், இனிமேல் யாராவது தும்மினால் கூட அனைவரையும் வெளியேற்றிவிடுவேன் என அனைத்து மாணவிகளையும் மிரட்டுகிறார் குறித்த வார்டன்.

விடுதி வார்டன்களாக உள்ள புனிதாவும் மைதிலியும் அக்கல்லூரியில் பேராசிரியர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆடியோ....

Key Words: Thiruvanamalai, Hostel Wardens,students

Adults Only

Cinema

Medical

Politics

Public

Study

Technology