The New Stuff

Study Aug 19

மோமோ இரட்டையர் பற்றிய முழுவிவரம்: உருவாகி, வளரும் செய்தி!

monochorionic,Monoamniotic Twins ,MoMo Twins,Mono

இரட்டைக் குழந்தைகளை பெற்று, அவர்களை தங்கள் வேலைகளை அவர்கள் தானாய் செய்து கொள்ளும் நிலை வரும் வரை வளர்த்து ஆளாக்குவதற்குள் இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் படும் பாடு இருக்கிறதே.., அதற்கு என தனி பொறுமை, கவனம், அன்பு, அரவணைப்பு போன்ற விஷயங்கள் தேவை. அதிலும் இரட்டையர் பிறப்பில் பல வகைகள் உள்ளன; ஆண்-பெண் இரட்டையர், பெண்-பெண் இரட்டையர், ஆண்-ஆண் இரட்டையர் இவை போன்ற வகைகள் தான் பெரும்பாலான மக்கள் அறிந்தவை.

ஆனால், நாம் அறியாத முக்கியமான இரட்டையர் வகை ஒன்று; அந்த இரட்டையர்களை வளர்ப்பது மாற்றான் சூர்யா, சாருலதா பிரியாமணி இவர்களை வளர்ந்ததை விட மிகவும் கடினமான விஷயம்! அப்படிப்பட்ட ஒரு தனித்துவம் பொருந்திய இரட்டையர்களை பற்றி தான் இந்த பதிப்பில் பார்க்க போகிறோம்! வாருங்கள் பதிப்பிற்குள் சென்று படித்து அறியலாம்.

மோமோ ட்வின்ஸ்

இந்த மோமோ இரட்டையர்கள் ஒரே கரு முட்டையில் இருவராக உருவாகி, ஒரே பனிக்குடத்தில் அதாவது ஆம்னியாட்டிக் உறையில் வளருவார்கள் ஆவர். இந்தக் குழந்தைகள் பார்க்க அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பர்; மேலும் அவர்களில் யார் எவர் என்று அடையாளம் காண்பதே மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். மேலும் இந்த மாதிரியான இரட்டையர்கள் மிகவும் அரிதாகவே, அதாவது 1 சதவிகிதம் மட்டுமே பிறக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

எப்படி உருவாகின்றனர்?

பெண்ணின் அண்டத்தை ஆணின் விந்து துளைத்து உள்சென்று அது கருவை உருவாக்கும் கருமுட்டையாக மாறுகிறது; இந்த கருமுட்டைகள் இரண்டாக பிரிந்து தனித்தனி அம்னியாட்டிக் உறையில் வளர்ந்தால் அவர்கள் டைஆம்னியாட்டிக் இரட்டையர் என்று அழைக்கப்படுவர்; இவர்களுக்கு ஒரு நஞ்சுக்கொடியின் மூலமாக உணவு மற்றும் பிற பொருட்கள் பகிர்ந்து வழங்கப்படும். இதுவே இந்த மோமோ இரட்டையர்கள் உருவாதல் என்பது மிகவும் அரிதான ஒன்று. உருவான கருமுட்டை ஒன்றாக இருக்கும்; ஆனால், அதனுள்ளிருந்து இரண்டு குழந்தைகள் உருவாகும். இந்த இரண்டு கருவிற்கு தனித்தனி நஞ்சுக்கொடி மூலமாக உணவுகள் மற்றும் பிற சத்துக்கள் வழங்கப்படும்.

எப்படி கண்டறிவது?

<இந்த மோமோ ட்வின்ஸ் அதாவது மோமோ இரட்டையர் கருத்தரிப்பை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனின் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்; ஏனெனில் மோமோ ட்வின்ஸ் அல்ட்ரா சவுண்ட் சோதனையின் போது அதிக ரெசொலூஷன் அதே சமயம் அறிந்து கொண்ட அந்த நொடியில் இருந்து 100 மடங்கு ஜாக்கிரதை உணர்வு கர்ப்பிணிக்கும் அவரை பார்த்துக் கொள்பவர்களுக்கும் தேவை.

மோமோ - டேஞ்சர் ஜோன்

மோமோ இரட்டையர் ஒரே ஆம்னியாட்டிக் பை - கருப்பைக்குள் வளர்வதால், அந்த இரண்டு குழந்தைகளும் ஒரே தொப்புள் கொடியால் பிணைக்கப்பட்டு உள்ளனர். தொப்புள் கோடி வழியாக செல்லும் சத்துக்கள் ஒரு குழந்தைக்கு அதிகமாகி, மற்றொரு குழந்தைக்கு குறைவாக கிடைத்து ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும், மற்ற குழந்தை ஆரோக்கியம் இன்றியும் பிறக்க வாய்ப்பு உள்ளது.

தொப்புள் கொடி

இந்த இரண்டு குழந்தைகளும் பிறக்கும் பொழுது, கர்ப்பிணியின் பிறப்புறுப்பு துளையில் வெளிப்படும் பொழுது பெரும் அபாயம் நேர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. கொடி சுற்றி குழந்தை பிறக்கும் பிரச்சனை மோமோ இரட்டையர் பிறப்பில் நிகழ்ந்தால் அது சூழ்நிலையை மேலும் கடினமாக்கி விடும். மேலும் கொடி சுருங்குதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்; தொப்புள் கோடி வழியாக ஒரு குழந்தைக்கு அதிக ரத்தம் கிடைத்து மற்ற குழந்தைக்கு குறைவாக கிடைத்தால், கருவிலேயே அந்த இரத்தம் குறைவாக பெற்ற குழந்தை இறந்து போகும் அபாயம் உண்டு.

குறைப்பிரசவம்

மோமோ இரட்டையர் ஒரே சவ்வுப்பையில் வளர்வதால், கர்ப்பிணியின் வயிறு மிகவும் பெரிதாக இருக்கும்; ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இந்த இரட்டையரால் கருவறைக்குள் வளர முடியாது; எனவே அவர்களை 34வது வாரத்தின் பொழுது அல்லது சில சமயங்களில் அபாயத்தின் அளவை பொறுத்து 26 அல்லது 28வது வாரத்திலேயே கூட அவர்களை தாயின் கருவறையில் இருந்து எடுத்து இன்குபேட்டரில் போட்டு வளர்ப்பர்.

தீர்வு

இந்த அனைத்து விதமான பிரச்சனைகளையும் எந்தவித இழப்பும் இன்றி முன் கூட்டியே சரி செய்ய அல்லது இழப்பை குறைக்க, கர்ப்பகால பரிசோதனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனின் பொழுது குழந்தையின் தன்மை பற்றி கண்டவுடனேயே மருத்துவரிடம் எல்லா விஷயங்களையும் குறித்து தீவிரமாக கலந்தாலோசித்து, சரியான சிகிச்சை முறையை, பரிசோதனைகளை மேற்கொண்டு, தொடர்ந்து கண்காணித்து வந்தால் இழப்பை குறைக்கலாம்; இது ஒன்றே தீர்வு!

விசித்திர பிறவி!

மோமோ இரட்டையர் கண்டிப்பாக ஒரே பாலினத்தோடு, ஒரே முகம் மற்றும் அனைத்து உடலுறுப்புகளும் அச்சு அசலாக ஒன்றாக இருக்கும். இந்த மோமோ இரட்டையரை கர்ப்பம் தரித்து இருக்கும் கர்ப்பிணிகளை கண்டிப்பாக 28வது வாரத்தில் மருத்துவமனையில் சேர்த்து விடுதல் வேண்டும். தொடர்ந்த மற்றும் தீவிர பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மோமோ இரட்டையர் இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகளாக கூட பிறக்க வாய்ப்புள்ளது.

Key Words: monochorionic,Monoamniotic Twins ,MoMo Twins,Mono

Adults_Only

Cinema

Medical

Politics

Public

Study

Technology