The New Stuff

Study Aug 15

தங்கம்"உருவானது எப்படி எனத் தெரியுமா?

gold, Nuclear Fusion, platinum, four-metre thick layer

ஒரு தங்க ஆபரணம் உங்கள் கைகளையும் காதுகளையும் கழுத்தையும் அலங்கரிக்கும் முன் கடந்துவரும் பாதை கொஞ்சநஞ்சமல்ல. பலரின் உழைப்பும் முயற்சியுமே இறுதிப்பயனாக நகையென உருவெடுத்து நம் கைக்கு வருகிறது. பெரும்பான்மை இந்தியர்கள் விரும்பும் நகைகள் தங்க நகைகளாகவே இருக்கின்றன. ராஜாங்கங்களின் சக்தியைத் தீர்மானிக்கும் இந்த உலோகம் எப்படி உருவானது எனத் தெரியுமா?

ஆஸ்டெக் பழங்குடியின மக்கள் தங்கம் என்பது 'சூரியனின் வேர்வை' எனக் கருதினர். இது உண்மையல்ல என்றாலும், இதைத் தங்கத்துக்கு ஏற்ற மிகத் துல்லியமான உவமை எனலாம்! பிரபஞ்சத்தில் காணப்படும் கோடானு கோடி நட்சத்திரங்களை இயக்கிக் கொண்டிருப்பது அணுக்கரு பிணைவு (Nuclear Fusion) எனும் செயல்பாடாகும். பிரபஞ்சம் தோன்றியபோது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகிய இரு அணு வகைகளே உருவாகியிருந்தன. இப்போது நாம் காணும் பெரும்பாலான நட்சத்திரங்கள் ஹைட்ரஜன் அணுக்களால்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைந்து அதைவிட எடை  அதிகமான ஹீலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்களை முறையே உற்பத்தி செய்கின்றன. இந்த வரிசையில், ஒரு கட்டத்தில் ஒரு நட்சத்திரத்தின் மையம் இரும்பு அணுக்களால் நிரம்பும்போது, இரும்பின் இறுக்கம் காரணமாக நட்சத்திரத்தின் இயக்கம் நிலைகுலைந்து மொத்த நட்சத்திரமும் தீபாவளி லட்சுமி வெடி போல வெடித்துச் சிதறுகிறது! 'சூப்பர்நோவா' என அறியப்படும் இந்த மாபெரும் நட்சத்திர வெடிப்பில் ஏற்படும் வினையின் மிச்ச எச்ச சொச்சமாகக் கிடைப்பதுதான் நாம் உட்சபட்ச உலோகமாகக் கருதும் தங்கம் (மற்றும் பிற எடை அதிகமுள்ள தனிமங்கள்)!

 

பூமியில் மட்டுமல்ல, அண்டம் முழுவதும் உள்ள பல கிரகங்கள் மற்றும் பால்வெளியில் அங்கும் இங்கும் சுற்றித்தெரியும் பல விண்கற்களிலும் கூட தங்கம் உள்ளிட்ட பிற தனிமங்கள் இருக்கக்கூடும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. இது தெரிந்திருந்தால் டிக் டிக் டிக் ஜெயம் ரவியை நிச்சயமாக் இந்திய பெண்கள் விண்வெளிக்கு அனுப்பியிருக்கமாட்டார்கள். ஏனென்றால், உலகத்தின் மொத்த தங்கதத்தில் 10% சதவீதத்துக்கும் மேல் நம் இந்திய பெண்களிடம்தான் உள்ளது! எவ்வளவு என்றால், ஆயிரம் லாரிகளில் நிரப்பக்கூடிய அளவுக்கு கிட்டத்தட்ட 18,000 டன் தங்கம்!

இயற்கையின் அரியதோர் அறிவியல் நிகழ்வால் உருவாவதால் என்னவோ, தங்கத்தின் மதிப்பு எப்போதும் நம் மக்களிடையே குறைவதே இல்லை. இப்படிப்பட்ட தங்கத்தை ஆபரண வடிவில் அணிந்துகொள்ள ஆசைப்படும் நாம், தங்கம் வாங்கும்போது கொஞ்சம் விழிப்புணர்வோடு இருப்பதும் அவசியம்தானே?
 
"ஷோ ரூம்களில் நகைகள் வாங்கும்போது, செய்கூலி சேதாரம் ஆகிய இரண்டு கட்டணங்களால் நகையின் விலையைக் கூட்டி, கடைக்காரர்கள் விற்கின்றனர். வேலையாட்கள் சம்பளம், வரி, பராமரிப்புச் செலவு இவற்றை ஈடுகட்டத்தான் இந்த விலை அதிகரிப்பு என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இந்தக் கட்டணங்கள் இல்லாமல் குறைந்த விலையில் தங்கம் வாங்க வேண்டும் என்றால் மொத்த வியாபாரம் செய்யும் நகைக்கடைகளை நாடுவதுதான் ஒரே வழி. இவ்வகையிலான மொத்த நகைக்கடைகள்  துல்லியமான வடிவமைப்பு கொண்ட, தரமான தங்க நகைகளை மெஷின் மூலம் தயாரிக்கின்றனர். எனவே, மிக மிகக் குறைவான செய்கூலி மற்றும்
சேதாரக் கட்டணத்தில் மலிவான விலையில் நகைகளை இக்கடைகளால் வழங்கமுடிகிறது.

அடுத்த முறை வாங்கும்போது, அது வெறும் நகையல்ல, நட்சத்திரத்தின் ஒரு துளி என்பதை நினைவில்கொள்ளுங்கள்!

 

Key Words: gold, Nuclear Fusion, platinum, four-metre thick layer

Adults_Only

Cinema

Medical

Politics

Public

Study

Technology