இரைச்சலை கட்டுப்படுத்தி நாசா சாதனைkingtamil.com
 

The New Stuff

Technology Visit 166

இரைச்சலை கட்டுப்படுத்தி நாசா சாதனை

flight, nasa, sound

விமானம் இயக்கப்படும்போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதமாக குறைத்து, நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். விமானங்கள் இயக்கப்படும் போது அதிகளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக வானில் பறக்கும் விமானத்திலிருந்து வரும் ஒலியை நிலத்தில் இருந்தே கேட்க முடியும். அப்படி இருக்கையில் விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்கள் இந்த இரைச்சல் சத்தத்தினால் அதிகளவில் பாதிப்படைகின்றனர்.

விமானத்தில் செல்லும் பயணிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியைக் குறைக்க ,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டுவந்தது. பல்வேறு சோதனைகளுக்குப் பின் தற்போது அந்த சோதனையில் குறிப்பிடத்தக்க வெற்றியை எட்டியுள்ளது என, நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாசாவின் சோதனை விமானங்களில் நடத்தப்பட்ட பல்வேறு மாற்றங்களுக்குப்பின், அவை இயக்கப்பட்டபோது இரைச்சல் ஒலி 70 சதவீதம் குறைந்துள்ளது என்றும் இதற்காக விமான அமைப்பில் மூன்று தொழில் நுட்ப மாற்றங்களைச் செய்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Key Words: flight, nasa, sound

Medical

Politics

Public

Study

Technology